சென்னையில் தொடர் கனமழை: மழைநீரில் மூழ்கிய சாலைகள் - போக்குவரத்து சில மணி நேரம் நிறுத்தம்
சென்னையில் தொடர் கனமழையால் சாலைகள் மூழ்கியது. இதனால் போக்குவரத்து சில மணி நேரம் நிறுத்தப்பட்டது.
சென்னை,
சென்னையில் தொடர் கனமழை காரணமாக சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. குறிப்பாக சென்னை எழும்பூர் பூந்தமல்லி சாலை மழையால் மூழ்கி போனது என்றே சொல்லலாம். அந்த அளவு அச்சாலையில் குளம்போல மழைநீர் தேங்கியிருந்தது. ஏற்கனவே இதுபோன்ற தொடர் மழை காரணமாக இரும்பு தகடு கொண்டு சாலையின் ஒரு பகுதி இணைக்கப்பட்டுள்ளது. எனவே மழையால் அதில் வாகனங்கள் சிக்காமல் இருக்கும் வகையில் நேற்று காலை 11.20 மணி முதல் பிற்பகல் 1.40 மணி வரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் நீர் உறிஞ்சும் எந்திரங்கள் மூலம் மழைநீர் உறிஞ்சப்பட்டது. ஆனாலும் மழை தொடர்ந்து பெய்ததால் இந்த பணி சவாலாகவே அமைந்தது. பின்னர் தேங்கிய மழைநீர் ஓரளவு குறைந்த நிலையில் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதேபோல ஜி.பி.சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட நகரின் பிரதான சாலைகளிலும் மழை காரணமாக சில மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story