நிவர் புயலால் முடங்கிய கடலூர் மாவட்டம்: சாலைகள் வெறிச்சோடின
நிவர் புயலால் கடலூர் மாவட்டம் முடங்கியது. சாலைகள் வெறிச்சோடின.
கடலூர்,
வங்க கடலில் உருவான நிவர் புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. புயல் பாதுகாப்பு மையங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அனைத்து துறை அதிகாரிகளும் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் புயலையொட்டி தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கடலூரில் முக்கிய சாலைகளான லாரன்ஸ் ரோடு, பாரதி ரோடு, சில்வர் பீச் சாலை, இம்பீரியல் ரோடு, கடலூர் -நெல்லிக்குப்பம் சாலை, சுப்புராயசெட்டி தெரு உள்பட பல்வேறு சாலைகளில் உள்ள ஒரு சில கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. கார், வேன், ஆட்டோ உள்பட எந்த வாகனங்களும் ஓடவில்லை. போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சாலைகளில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது.
மஞ்சக்குப்பம் அண்ணாமார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் ஆகிய மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. ஏற்கனவே தானே, கஜா, வார்தா புயலின் தாக்கத்தை மக்கள் நன்கு உணர்ந்து இருந்ததால் முன்கூட்டியே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டனர். காய்கறிகள், அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர்.
இதேபோல் பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story