உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்


உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
x
தினத்தந்தி 28 Nov 2020 4:15 AM IST (Updated: 28 Nov 2020 12:54 AM IST)
t-max-icont-min-icon

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

நெல்லை, 

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் மு.அப்துல் வகாப் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.

தொடர்ந்து புனித அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கும், ஆரைக்குளம் புனித அன்னாள் முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கும் உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏர்வாடி முதியோர் இல்லத்தில் தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் கிரகாம்பெல் மூன்று வேளையும் உணவு வழங்கினார். பணகுடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த 4 குழந்தைகளுக்கும், நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 7 குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தார். நாங்குநேரியில் உள்ள அரசன் ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கி அனைவருக்கும் வேட்டி- சேலை வழங்கினார். வள்ளியூர் புதிய பஸ்நிலையத்தில் கழக நிர்வாகிகள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து 43 கிலோ எடையுள்ள கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பணகுடி அரசு ஆஸ்பத்திரியில் மரக்கன்று நட்டார்.

மாலையில் வள்ளியூர் 18-வது வார்டில் கட்சி கொடியேற்றி, வள்ளியூர், பணகுடி பகுதிகளில் உள்ள கைப்பந்து, கிரிக்கெட் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். முன்னதாக பணகுடி ராமலிங்க சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகளில் நாங்குநேரி ஒன்றிய பொறுப்பாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, வள்ளியூர் பேரூர் செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்ட வர்த்தகர் அணி இணை செயலாளர் ஞானராஜ், பட்டர்புரம் முத்துப்பாண்டி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சிவா, நாங்குநேரி நகர பொருளாளர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திசையன்விளை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு ராதாபுரம் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தங்க மோதிரம் அணிவித்து, குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கி, இனிப்புகளையும் வழங்கினார். விழாவையொட்டி தொடர்ச்சியாக ஒரு மாதத்துக்கு கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கோலப்போட்டிகள் நடத்த ராதாபுரம் ஒன்றியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி, திசையன்விளை பேரூர் ஜான் கென்னடி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜான் ரபிந்தர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அனிதா பி.பிரின்ஸ், உறுமன்குளம் ஊராட்சி செயலாளர் அமைச்சியார், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமேஷ், திசையன்விளை பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த விழாவுக்கு, ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ் சுடலைக்கண்ணு தலைமை தாங்கி, முதியோர் இல்லத்தில் உணவு வழங்கினார். பின்னர் பரப்பாடியில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் சேகர், லிங்கேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கோபாலசமுத்திரம், சேரன்மாதேவி, வீரவநல்லூர் ஆகிய இடங்களில் ரத்ததான முகாம், முதியோர்களுக்கு மதிய உணவு வழங்குதல் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர் சேரன்மாதேவி முத்துப்பாண்டி என்ற பிரபு, கோபாலசமுத்திரம் நகர செயலாளர் முருகேசன், மனிஷா, மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர் வேல்முருகன் மற்றும் அண்ணாத்துரை, சுரேஷ், மணிமாறன், வானமலை, உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வளவில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும், முதியோர் இல்லத்திற்கு சென்று முதியோர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. மூன்று இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 50 பேர் ரத்ததானம் செய்தனர்.


Next Story