‘நான் மீண்டும் வருவேன்’ என்று யாராவது சாதாரணமாக கூறினாலும் மக்கள் சிரித்து விடுகிறார்கள் - தேவேந்திர பட்னாவிஸ் மீது மந்திரி ஜெயந்த் பாட்டீல் தாக்கு
நான் மீண்டும் வருவேன் என்று யாராவது சாதாரணமாக கூறினாலும் மக்கள் சிரித்து விடுகிறார்கள் என்று தேவேந்திர பட்னாவிசை மந்திரி ஜெயந்த் பாட்டீல் விமர்சித்தார்.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரி ஜெயந்த் பாட்டீல் அவரங்காபாத் பட்டதாரி தொகுதியில் நடக்க உள்ள எம்.எல்.சி. தேர்தலுக்கு அவரது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர், கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் மீண்டும் முதல்-மந்திரியாக வருவேன் என கூறிய தேவேந்திர பட்னாவிசையும், தொடர்ந்து மராட்டியத்தில் விரைவில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என கூறி வரும் அந்த கட்சியின் தலைவர்களை விமர்சித்து பேசினார்.
இது குறித்து அவர் கூறியதாவது.
இப்போது யாராவது சாதாரணமாக ‘நான் மீண்டும் வருவேன்‘ என கூறினாலும் மக்கள் சிரித்து விடுகிறார்கள். காங்கிரஸ், தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர்கள், ‘எதையாவது செய்து மீண்டும் ஆட்சி அமையுங்கள் அல்லது நாங்கள் மீண்டும் காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரசுக்கு சென்றுவிடுவோம்‘ என கூறி வருகிறார்கள். அவர்களை ஆறுதல் படுத்தவே மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என பா.ஜனதாவினர் பேசி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story