அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்


அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2020 11:44 PM GMT (Updated: 28 Nov 2020 11:44 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பது குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பது குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி கையேட்டை அரசு அலுவலர்களுக்கு வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், பெண் குழந்தைகளை பாதுகாத்தல், பெண் குழந்தைகளை படிக்க வைத்தல் திட்டம் 2018-19-ம் ஆண்டில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதாச்சாரத்தினை உயர்த்துதல், பெண் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்தல், பெண் குழந்தைகளின் கல்வியினை மேம்படுத்தி, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்திடவும், அவர்களது வாழ்வின் லட்சியத்தினை நோக்கி முன்னேற செய்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்திடவும், சுயசார்புடன் பிறர் துணையின்றி, சமூக அந்தஸ்துடன் தைரியமாக வாழவும், சுதந்திரமாக அணுகவும், அவர்களது வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்களின் வளர்ச்சிக்கு அனைத்துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என்றார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜி.கே.லோகேஸ்வரி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story