வரவு கால்வாய் ஆக்கிரமிப்பால் தண்ணீரின்றி காணப்படும் ஆரணி ஏரி


வரவு கால்வாய் ஆக்கிரமிப்பால் தண்ணீரின்றி காணப்படும் ஆரணி ஏரி
x
தினத்தந்தி 29 Nov 2020 5:25 AM IST (Updated: 29 Nov 2020 5:25 AM IST)
t-max-icont-min-icon

வரவு கால்வாய் ஆக்கிரமிப்பால் ஆரணி ஏரி தண்ணீரின்றி காணப்படுகிறது.

பெரியபாளையம், 

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம், ஆரணியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 260 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் இருந்து ஆரணி, பனையஞ்சேரி, சீஞ்சேரி, மல்லியங்குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாசன வசதி பெற்று வந்தனர். இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் புதுப்பாளையம் சிறு பாலத்தில் இருந்து வரவு கால்வாயின் வழியாக ஆரணி ஏரிக்கு தண்ணீர் வரத்து ஏற்படும். அதன் பின்னர் ஏரி முழு கொள்ளளவை எட்டும்.

ஆனால், வரவு கால்வாயை ஏராளமானோர் ஆக்கிரமித்ததால் ஏரிக்கு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. இதனால் ஏரி தண்ணீரின்றி காணப்படுகிறது. கருவேலமுள் வளர்ந்து ஏரி காடுபோல் காட்சியளிக்கிறது.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஆரணி ஏரிக்கு வரும் வரவு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story