தேவிகாபுரத்தில், ஆசிரியர் வீட்டில் இருந்த 61 பவுன் நகைகள் மாயம் - போலீசார் விசாரணை
தேவிகாபுரத்தில் ஆசிரியர் வீட்டில் 61 பவுன் நகைகள் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு,
சேத்துப்பட்டு அருகே தேவிகாபுரம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45), இவர் மதுரை பெரும்பட்டூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா மூங்கில்தாங்கல் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி அப்பேடு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு நிர்மலா பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுக்க திறந்தார். ஆனால் பீரோவில் 61 பவுன் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் நகைகள் மாயமானது குறித்து அவர் கணவர் ஏழுமலையிடம் கூறினார்.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் ஏழுமலை புகார் செய்தார். அதைத்தொடர்ந்து போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பூட்டி வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த நகைகள் மாயமானதால் ஏழுமலை, நிர்மலா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்கள் யாராவது பீரோவை திறந்து நகைகளை திருடி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story