திருப்பத்தூர் சின்னராஜ் நாயுடு சூப்பர் மார்க்கெட், நாட்டு மருந்துக்கடை திறப்பு விழா - அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு


திருப்பத்தூர் சின்னராஜ் நாயுடு சூப்பர் மார்க்கெட், நாட்டு மருந்துக்கடை திறப்பு விழா - அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு
x
தினத்தந்தி 29 Nov 2020 4:30 PM IST (Updated: 29 Nov 2020 4:10 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் சின்னராஜ் நாயுடு சூப்பர் மார்க்கெட் மற்றும் நாட்டு மருந்துக்கடை திறப்பு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் ஆலங்காயம் ரோடு பகுதியில் 75 வருட பாரம்பரியமிக்க சின்னராஜ் நாயுடு சூப்பர் மார்க்கெட் மற்றும் நாட்டு மருந்துக் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை உரிமையாளரும் வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட துணைத் தலைவரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, திருப்பத்தூர் நுகர்பொருள் வினியோகஸ்தர் சங்கம், பலசரக்கு மளிகை வியாபாரிகள் சங்கங்களின் இயக்குனருமான டி.சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி குத்து விளக்கேற்றி விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், அ.தி.மு.க. நகர செயலாளர் டி.டி.குமார், முன்னாள் எம்.எல்.ஏ.வான கே.ஜி.ரமேஷ், தி.மு.க. மாவட்ட செயலாளர் தேவராஜ், நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், பர்கூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோவிந்தராஜன், ஒன்றியக்குழு தலைவர் கவிதா கோவிந்தராசன், மளிகை வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் டி.எஸ்.பார்த்தசாரதி, தொழிலதிபர் ஞானசேகரன், நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் ஏ செந்தில்முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் உரிமையாளர் டி. சீனிவாசன் கூறுகையில் “இங்கு அனைத்து மளிகை பொருளும் தரமாகவும் குறைந்த விலையில் கிடைக்கும் மேலும் அனைத்து நாட்டு மருந்துகளும் கிடைக்கும்” என்றார். முடிவில் எஸ்.பிரியா என்கின்ற ஜெயலட்சுமி, எஸ்.ஜெ. பரத் ஆகியோர் நன்றி கூறினர்.

Next Story