கொடுமுடி சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய பலத்த மழை: காலிங்கராயன் வாய்க்கால் கரை உடைந்தது; 40 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது - கரும்பு-மஞ்சள் தோட்டங்களில் தண்ணீர் புகுந்தது


கொடுமுடி சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய பலத்த மழை: காலிங்கராயன் வாய்க்கால் கரை உடைந்தது; 40 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது - கரும்பு-மஞ்சள் தோட்டங்களில் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 29 Nov 2020 4:45 PM GMT (Updated: 29 Nov 2020 4:32 PM GMT)

கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் காலிங்கராயன் வாய்க்கால் கரை உடைந்து 40 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. கரும்பு-மஞ்சள் தோட் டங்களில் தண்ணீர் புகுந்தது.

ஈரோடு,

வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் கடந்த 26-ந் தேதி புதுச்சேரி- மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத் தின் பெரும்பாலான இடங் களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. கொடுமுடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் பகல் முழு வதும் வானம் மேகமூட்ட மாகவே காணப்பட்டது. வெயில் அடிக்கவில்லை.

இந்த நிலையில் இரவு 9.30 மணி அளவில் மழை தூற தொடங்கியது. சிறிது நேரத்தில் கனத்த மழையாக மாறியது. அதன்பின்னர் விடிய விடிய நிற்காமல் அதிகாலை வரை கொட்டித்தீர்த்தது. அதன் பின்னரும் மழை தூறிக் கொண்டே இருந்தது. கொடு முடி பகுதியில் நேற்று முன் தினம் இரவு 334.4 மில்லி மீட்டர் மழை அளவு பதி வாகியுள்ளது குறிப்பிடத்தக் கது.

கொடுமுடி பகுதியில் பெய்த இந்த வரலாறு காணாத மழை யால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. ரோடுகளில் மழைநீர் வெள் ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

மழைநீர் அதிக அளவில் காலிங்கராயன் வாய்க்காலில் கலந்ததால் கரைகளை மூழ் கடித்தபடி தண்ணீர் சென்றது. இதனால் கொடுமுடி அருகே வருந்தியாபாளையத்தில் காலிங்கராயன் வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற் பட்டது.

இதனால் வாய்க்கால் தண்ணீர் கடைமடையில் உள்ள வயல்களில் புகுந்தது. மேலும் மஞ்சள் மற்றும் கரும்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது. வடக்குப் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகேயும் காலிங் கராயன் வாய்க்காலின் கான்கிரீட் கரை தடுப்பும் சேதமடைந்தது.

இதைத்தொடர்ந்து உடைப்பு ஏற்பட்ட காலிங்க ராயன் வாய்க்கால் கரையை அடைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டது. தீயணைப்புத் துறை மற்றும் பொதுப்பணித் துறை ஊழியர்கள் மணல் மூட்டைகளை வாய்க்கால் கரையில் வைத்து அடைத் தனர். தகவல் கிடைத்து மொடக்குறிச்சி வி.பி.சிவ சுப்பிரமணி எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ. சைபுதீன் ஆகியோரும் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு பணி களை துரிதப்படுத்தினர்.

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர் காங்கேயம் சாலையில் உள்ள மதகுகள் வழியாக காலிங்கரா யன் வாய்க்காலுக்கு வரும். இங்கிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் காவிரி ஆற்றை ஒட்டியவாறு ஓடும் புகளூரான் வாய்க்காலில் சென்று கலந்து விடும். கனமழை காரணமாக மதகுகள் வழியாக உபரி நீர் அதிக அளவில் சென்றதால் கொடுமுடி ரோஜா நகர், எஸ்.என்.பி.நகர், புதுமாரியம் மன் கோவில் பின்புறம் மற்றும் புகளூரான் வாய்க்கால் கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் 33 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத் ததும் கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர், பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், கொடு முடி போலீசார் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களை சேர்ந்த 52 பேரை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடத்திலும், 13 குடும்பங்களை சேர்ந்த 35 பேரை சென்ன சமுத்திரம் அருகே உள்ள சாலைப்புதூர் சமுதாய நலக் கூடத்திலும் தங்க வைத்தனர். மேலும் தகவல் அறிந்ததும் அங்கு ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவும் நேரில் சென்றார். பின்னர் அவர் பாதுகாப்பு நடவடிக்கை கள் குறித்து அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து தக்க நட வடிக்கை எடுக்க உத்தர விட்டார்.

இதேபோல் கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர், குப்பம்பாளையம் சாலை, பெரியவட்டத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் மழை வெள்ளம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

இதற்கிடையே இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் பாதிக்கப்பட்ட பகுதி கள் அனைத்தையும் உடனே சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி யுள்ள முகாம்களுக்கு சென்று அவர்களை சந்தித்தார்.

ஊஞ்சலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையில் கொளத்துப் பாளையம் கிராமத்துக்கு உள்பட்ட ஜெ.ஜெ நகரில் உள்ள 8 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 28 பேர் மீட்கப்பட்டு காளியபாளையம் பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் தங்க வைக்கப் பட்டனர்.

கொளத்துப்பாளையம் ஊராட்சி அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதுபற்றி அறிந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் அங்கு சென்று மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் கொளத்துப் பாளையம் ஜெ.ஜெ.நகர் பகுதிக்கு சென்ற அவர், மழை நீர் சூழ்ந்த 8 வீடுகளை நேரில் பார்த்தார். மேலும் பாதிக்கப் பட்டவர்கள் தங்க வைக்கப் பட்டுள்ள காளிபாளையம் பகவதி அம்மன் கோவில் மண்டபத்துக்கும் கலெக்டர் சென்று பார்வையிட்டார். அதன்பின்னர் பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட அதிகாரி களுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது அவருடன் கொளத் துப்பாளையம் ஊராட்சி தலைவர் ராஜ்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் பரமசிவம், ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் புதூர் கலைமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இடைவிடாது பலத்த மழை பெய்தது. இத னால் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூலகத்தை மழை வெள்ளம் மூழ்கடித்தது. மேலும் பள்ளி மாணவிகள் விடுதி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்தது.

இதேபோல் சாவடி பாளையம் ரெயில்வே நுழைவு பாலம், பஞ்சலிங்கபுரம் நுழைவு பாலம் ஆகியவற்றிலும் தண்ணீர் காட்டாறுபோல் ஓடியது. இதனால் அந்த வழியாக கார், பஸ், லாரி, இருசக்கர வாகனங்கள் என எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப் பட்டது

சிவகிரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் நேற்று அதிகாலை 1 மணி வரை விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் சிவகிரி, கந்தசாமி பாளையம், வேட்டுவபாளை யம், அஞ்சூர் போன்ற பகுதி களில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங் கியது. மேலும் நேற்று காலை யில் மழை தூறிக்கொண்டிருந் தது. இதனால் சிவகிரி கடைவீதி மற்றும் மார்க்கெட் பகுதியில் மக்கள் நடமாட்ட மின்றி வெறிச்சோடி காணப் பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- கொடுமுடி -334.4, மொடக் குறிச்சி 60, சென்னிமலை -11, ஈரோடு -5, எலந்தகுட்டை மேடு -1, கோபி -1. மாவட்டம் முழுவதும் மொத்தம் 412.4 மில்லி மீட்டர் மழை அளவும், சராசரியாக 24.25 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.

Next Story