சுடுகாட்டுக்கு பிணத்தை எடுத்து செல்லும்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு; 3 பேர் படுகாயம் உயர் அழுத்த மின்கம்பி வாகனத்தில் உரசியது
சுடுகாட்டுக்கு பிணத்தை எடுத்து செல்லும்போது வாகனத்தில் உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 75). உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு வாகனத்தில் எடுத்து சென்றனர். அப்போது அந்த வாகனத்தின் மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியதாக கூறப்படுகிறது.
இதில் அந்த வாகனத்தில் இருந்த மங்கலம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி (40), பாஸ்கர் (46), அவரது மகன் முகி (18), நீலமேகம் (28) ஆகியோரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக மின்சாரத்தை துண்டித்து சம்பந்தப்பட்ட 4 பேரையும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக இறந்து போன்ார். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரோசையன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story