நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை


நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Dec 2020 4:37 AM IST (Updated: 1 Dec 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை, 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வங்க கடலின் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதாகவும், இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது. எனவே ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு குடிபெயர வேண்டும். பழமையான, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள கட்டிடங்களில் வசிப்போர் அந்த கட்டிடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் குடியேற வேண்டும். அதீத கனமழை ஏற்படும் பட்சத்தில் நெல்லை மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் குடியேற வேண்டும்.

மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டும் அறிவிப்புக்கு ஏற்ப அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். திசையன்விளை மற்றும் ராதாபுரம் தாலுகாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிவாரண மையங்களில் குடியேற வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பு நிமித்தமாக தற்காலிக நிவாரண முகாம்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் பேரிடர்கள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால சேவை மைய தொலைபேசி எண் 0462 2501070, 0462-2500191 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் தாலுகா அலுவலகங்களை வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் - 6374001902, நெல்லை தாலுகா அலுவலகம் - 9445000671, பாளையங்கோட்டை - 9445000669, மானூர் - 9442214727, சேரன்மாதேவி - 9751501322, 9445000672, நாங்குநேரி - 9080589731, ராதாபுரம் - 9677281680, திசையன்விளை - 9944306770 ஆகிய வாட்ஸ்அப் எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story