டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்கு
சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்க-விவசாயிகள் சங்க போராட்டக்குழு சார்பில் புதிய பஸ் நிலையம் முன்பு 2-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்,
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாய அமைப்புகளை அழைத்து பேசி சுமூக தீர்வு காண வலியுறுத்தியும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மசோதாவை கைவிட வேண்டும், பொது வினியோக திட்டத்தை கைவிடுவதை கண்டித்தும் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்க-விவசாயிகள் சங்க போராட்டக்குழு சார்பில் புதிய பஸ் நிலையம் முன்பு 2-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் அகஸ்டின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் செல்லதுரை மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 25 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Tags :
Next Story