கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 6,290 பேர் குணமடைந்தனர்


கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 6,290 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 2 Dec 2020 3:15 AM IST (Updated: 2 Dec 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் ஒரேநாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 290 பேர் குணமடைந்தனர்.

மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 4 ஆயிரத்து 930 பேருக்கு வைரஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 28 ஆயிரத்து 826 ஆக உயர்ந்து உள்ளது.

ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 290 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகினர். இதுவரை மாநிலத்தில் 16 லட்சத்து 91 ஆயிரத்து 412 பேர் குணமாகி ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 89 ஆயிரத்து 98 பேர் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மாநிலத்தில் மேலும் 95 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகினர். வைரஸ் நோய்க்கு மொத்தம் 47 ஆயிரத்து 246 பேர் உயிரிழந்து உள்ளனர். மராட்டியத்தில் 1 கோடியே 9 லட்சத்து 15 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மும்பையை பொறுத்த வரை புதிதாக 724 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 2 லட்சத்து 84 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் பலியானதால் நகரில் இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 893 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story