துறையூர் மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


துறையூர் மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 2 Dec 2020 6:13 AM IST (Updated: 2 Dec 2020 6:13 AM IST)
t-max-icont-min-icon

துறையூரில் உள்ள மார்க்கெட் சாலையின் இருபுறமும் உள்ள கடைக்காரர்கள் அவரவர் கடைகளுக்கு முன் சாலையை ஆக்கிரமித்து தகரத்தால் மேற்கூரை அமைத்து இருந்தார்கள்.

துறையூர்,

துறையூரில் உள்ள மார்க்கெட் சாலையின் இருபுறமும் உள்ள கடைக்காரர்கள் அவரவர் கடைகளுக்கு முன் சாலையை ஆக்கிரமித்து தகரத்தால் மேற்கூரை அமைத்து இருந்தார்கள். இந்தநிலையில் இதனை அடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் துறையூர் நகராட்சி அதிகாரிகள் நேற்று மார்க்கெட் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றினார்கள். அப்போது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருந்த அனைத்தும் அகற்றப்பட்டு நகராட்சி வண்டியில் ஏற்றிச்செல்லப்பட்டது. மேலும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story