குளித்தலை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியினர் 25 பேர் கைது


குளித்தலை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியினர் 25 பேர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2020 7:18 AM IST (Updated: 2 Dec 2020 7:18 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தோகைமலை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு குளித்தலை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 25 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கை மீறி அதிகளவு கூட்டம் கூடியதால் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜி உள்பட 25 பேரை குளித்தலை போலீசார் கைது செய்து தனியார் திருமண தகவல் மையத்தில் அடைத்து வைத்தனர்.

Next Story