மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 Dec 2020 10:00 AM GMT (Updated: 2 Dec 2020 9:39 AM GMT)

மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கொரோனாதொற்று உறுதியானது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 16 ஆயிரத்து 158 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 15 ஆயிரத்து 892 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. 15 ஆயிரத்து 577 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 2,077 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 88 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 20 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 912 ஆக உயர்ந்துள்ளது. 1,681 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 2,077 பேருக்கு சோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. வழக்கம்போல் மாவட்ட சுகாதார துறையினர் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை பற்றிய விவரங்களை தெரிவிக்கவில்லை.

மாநில சுகாதாரத்துறை புள்ளிவிவரப்படி மாவட்டத்தில் 322 பேர் நோய் பாதிப்பில் இருந்து விடுபடவில்லை என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ள விவரத்தின் படி 88 பேர் மட்டுமே அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 8 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் 236 பேர் எந்த நிலையில் உள்ளனர் என்ற விவரம் முறையாக தெரிவிக்கப்படவில்லை.

மாவட்ட சுகாதாரத்துறை இதுபற்றிய விவரங்களை தொடர்ந்து அறிவிக்காத நிலையே நீடிக்கிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையிலும் பொது இடங்களில் நோய்த்தடுப்பு விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அரசு துறைகளின் இந்த செயல்பாடு மாவட்டத்தில் நோய் பரவலை அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்தும்.

Next Story