செங்கம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேர் கைது


செங்கம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2020 7:00 PM IST (Updated: 2 Dec 2020 7:10 PM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கம், 

செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் ஜேசுராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முள்ளுகுட்டை ஏரி அருகே உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 2 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் திருவள்ளுவர்நகர் நரிக்குறவர்காலனியை சேர்ந்த வேலு (வயது 38), மகேஷ் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Next Story