பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அரசு செயலாளர் ஸ்மிதா வலியுறுத்தல்


பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அரசு செயலாளர் ஸ்மிதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Dec 2020 5:14 AM IST (Updated: 3 Dec 2020 5:14 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் தடை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அரசு செயலாளர் ஸ்மிதா வலியுறுத்தினார்.

புதுச்சேரி, 
.
தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தையொட்டி புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு குழுமத்துடன் இணைந்து பிளாஸ்டிக் தடை சட்டம் அமலாக்குவது தொடர்பாக அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் நடத்தியது.

முகாமினை சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஸ்மிதா தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுவை மாநிலத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். தொடக்கத்தில் இருந்த வேகம் தற்போது இல்லை. மக்களிடையே பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கு இது சரியான நேரம். இதில் சிரமங்கள்கூட இருக்கலாம். பிளாஸ்டிக் பயன்பாடு என்பது பாதிப்பினை ஏற்படுத்தும். புதுவையில் பாரதிதாசன் மற்றும் தாகூர் கலைக்கல்லூரிகள் பிளாஸ்டிக் பயன்பாடற்ற கல்லூரிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஸ்மிதா பேசினார்.

முகாமில் சுற்றுச்சூழல் துறையின் இயக்குனர் தினேஷ் கண்ணன், முதுநிலை என்ஜினீயர் ரமேஷ் மற்றும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் தடை சட்டத்தை சிறப்பாக அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

Next Story