தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வு
வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன இந்த நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார். அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், கூடுதல் கலெக்டர் (வருவாய் )வி‘்ணு சந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 21 கடலோர கிராமங்களும் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதிகள் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு மற்றும் தமிழக பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு ஆகியோர் பணியமர்த்தப்பட்டு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்ய தயார் நிலையில் உள்ளனர்.
நிவாரண முகாம்கள்
இதுதவிர நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ள ஒவ்வொரு இடங்களிலும் மருத்துவ குழுவும் தயார் நிலையில் உள்ளது. இதை தவிர 21 நடமாடும் மருத்துவக் குழுவும் சேவை செய்ய தயார்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக 4 ஆம்புலன்ஸ்களும் மருத்துவ சேவைக்காக வர உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story