கொரோனாவினால் மூச்சு திணறல்: புதுச்சேரி கலெக்டர் அருண் ஜிப்மரில் அனுமதி


கொரோனாவினால் மூச்சு திணறல்: புதுச்சேரி கலெக்டர் அருண் ஜிப்மரில் அனுமதி
x
தினத்தந்தி 3 Dec 2020 5:38 AM IST (Updated: 3 Dec 2020 5:38 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருப்பினும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு அறிகுறி இல்லாமல் இருந்தால் வீட்டில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட வேறு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட கலெக்டரும், சுகாதாரத்துறை செயலாளருமான அருண் சிறப்பாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் தன்னை வீட்டில் தனிமை படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் பணியில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டனர்.

இதற்கிடையே நேற்று கலெக்டர் அருணுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story