திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கன மழை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
திருவாரூர்,
வங்க கடலில் உருவான புரெவி புயல் கன்னியாகுமரி-பாம்பன் இடையே நாளை (வெள்ளிக்கிழமை) கரையை கடக்கிறது. புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் இரவு திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது. நேற்று காலையிலும் தொடர்ந்து விட்டு, விட்டு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் வானம் கருமேக கூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. மழையினால் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கியது. இதனால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழந்தனர். தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியான முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
மன்னார்குடி
புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று காலை முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இந்த பகுதியில் தொடர் மழை காரணமாக விடிந்ததே தெரியாத அளவுக்கு வானம் மேக மூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
மன்னார்குடி நகர பகுதியில் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைத்தெருக்களில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. நகரின் பல பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் விட்டு விட்டு தொடர்ச்சியாக குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டனர். சம்பா, தாளடி பயிர்களில் மழைநீர் தேங்காமல் அதனை வடிய வைக்கும் பணியை விவசாயிகள் மேற்கொண்டனர். நெற்பயிர்களில் ஆனைக்கொம்பன் ஈயை கட்டுப்படுத்த வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். மழை பெய்தபோதும் வேளாண் அதிகாரிகள் நெற்பயிரை நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தேவையான பரிந்துரைகளை வழங்கி வருகிறார்கள். கிராமப்புற சாலைகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. அதன் பிறகு நாள் முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், பூந்தாழங்குடி, புனவாசல், கிளியனூர், மரக்கடை, கோரையாறு, அதங்குடி, வேளுக்குடி, சித்தனங்குடி, கோம்பூர், நாகங்குடி, பழையனூர், சாத்தனூர், வடகட்டளை, கானூர், மங்களாபுரம், புள்ளமங்கலம், பாலக்குறிச்சி, சேந்தங்குடி, திருநெல்லிக்காவல், மாரங்குடி, ஓகைப்பேரையூர், பாரதிமூலங்குடி, திருராமேஸ்வரம், ராமநாதபுரம், குலமாணிக்கம், வாழச்சேரி மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையால் விவசாய நிலங்களில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் தேங்கி நின்றது. அதேபோல தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழை நிலவரம்
சம்பா, தாளடி சாகுபடி பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் மழையினை பயன்படுத்தி களை எடுப்பது போன்ற பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை விட்டு, விட்டு மிதமான அளவில் பெய்து வந்த மழை மாலை 5 மணிக்கு கனமழையாக மாறி பல மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இரவு வரை கனமழை நீடித்தது. நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருத்துறைப்பூண்டி-23, முத்துப்பேட்டை-16, திருவாரூர்-15, நன்னிலம்-14, மன்னார்குடி-13, குடவாசல்-10, நீடாமங்கலம்-10, பாண்டவயாறு தலைப்பு-7.

Related Tags :
Next Story