டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்செந்தூரில், நாளை தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்; அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தகவல்
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல் பிரசாரம் சம்பந்தமாக தமிழக முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தேர்தல் பணிக்குழு இணை தலைவருமான ராஜகண்ணப்பன் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு வருகிறார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளை பாதிக்கும் விதமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், இந்த வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழித்து வரும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு, திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத்தினரும், விவசாய பெருமக்களும், தி.மு.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளும், மாவட்ட அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தேர்தல் பிரசாரம் சம்பந்தமாக தமிழக முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தேர்தல் பணிக்குழு இணை தலைவருமான ராஜகண்ணப்பன் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு வருகிறார். தொடர்ந்து புதுக்கோட்டை சத்தியா ரிசார்ட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை சத்யா மகாலில் சிறப்புரையாற்றுகிறார். 6.30 மணிக்கு டி.எம்.பி. மண்டபத்தில் பரப்புரையை நிறைவு செய்கிறார். 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு திருச்செந்தூர் மக்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டு 9.30 மணிக்கு முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடல் மற்றும் 10.30 மணிக்கு கிருஷ்ண ராமானுஜதாஸ் மண்டபத்தில் சிறப்புரையாற்றுகிறார். மாலை 4 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முக்காணி ஊராட்சியில் ஊர் மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுகிறார். தொடர்ந்து அங்குள்ள ஏ.எம்.எம். இசக்கி மஹாலில் சிறப்புரையாற்றுகிறார். நிறைவாக இரவு 7 மணிக்கு கருங்குளம் அருகிலுள்ள ராமானுஜம்புதூர் ஊராட்சி எஸ்.பி.ஆர். திருமண மண்டபத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். 9-ந் தேதி (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு குலசேகரன்பட்டினம் ஊர் மக்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டு அங்குள்ள பெருமாள் கோவில் தெருவில் மக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.தொடர்ந்து புறவழிச்சாலையில் உள்ள ராயல் மஹால் தேர்தல் பிரசாரம் செய்கிறார். மாலை 6.30 மணிக்கு சாத்தான்குளம் பன்னம்பாறை பஸ் நிலையம் அருகில் தேர்தல் பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்கிறார். 3 நாட்கள் நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர பகுதி, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து பொறுப்பில் உள்ள நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், கழக முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story