மாவட்ட செய்திகள்

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த மனைவி 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார் + "||" + Rs 1 crore for insurance money The wife who killed her husband Trapped after 8 years

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த மனைவி 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த மனைவி 8 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்
ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த மனைவி 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
மும்பை,

மராட்டிய மாநிலம் லாத்தூரை சேர்ந்தவர் அன்னாராவ். இவரது மனைவி ஜோதி. அன்னாராவ் கடந்த 2012-ம் ஆண்டு லாத்தூரில் உள்ள பாபால்காவ் பகுதியில் வாகனம் மோதி உயிரிழந்தார். இந்தநிலையில் அன்னாராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காப்பீடு நிறுவனம் சார்பில் போலீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே அன்னாராவின் தம்பி பகவத், இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது அண்ணன் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார். அண்ணன் மனைவி ஜோதி, காப்பீடு நிறுவன ஏஜென்டு ரமேஷ், அவரது நண்பர் கோவிந்த் ஆகியோர் மீது கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி ஆவ்சா போலீசில் அவர் புகார் அளித்து இருந்தார். ஆனால் போலீஸ் அப்போது ஜோதி மீது கொலை வழக்குப்பதிவு செய்யவில்லை.

இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிக்கில் பிங்லே உத்தரவின் பேரில் வழக்கு கடந்த 3 மாதங்களாக மறுவிசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையில் ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக அன்னாராவ் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.

இந்தநிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்ததாக அவரது மனைவி ஜோதியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.