ஆடை கட்டுப்பாடு விவகாரம் ஷீரடி கோவில் நிர்வாகத்துக்கு திருப்தி தேசாய் கடும் எதிர்ப்பு முதல்-மந்திரிக்கும் கடிதம்


ஆடை கட்டுப்பாடு விவகாரம் ஷீரடி கோவில் நிர்வாகத்துக்கு திருப்தி தேசாய் கடும் எதிர்ப்பு முதல்-மந்திரிக்கும் கடிதம்
x
தினத்தந்தி 4 Dec 2020 6:05 AM IST (Updated: 4 Dec 2020 6:05 AM IST)
t-max-icont-min-icon

ஆடை கட்டுப்பாடு விவகாரத்தில் கோவில் நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு, அவர் முதல்-மந்திரிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

மும்பை, 

ஷீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. பொது மக்கள் அளித்த புகாரின் பேரில், கோவில் அறக்கட்டளை நிர்வாகம் சமீபத்தில் பக்தர்கள் நாகரிக ஆடை அல்லது இந்திய பாரம்பரிய உடையணிந்து கோவிலுக்கு வருமாறு வேண்டுகோள்விடுத்து உள்ளது.

மேலும் இதுதொடர்பான அறிவிப்பு பலகையும் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கோவில் அறக்கட்டளையின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டு கோவில் நிர்வாகத்திற்கு எச்சரிக்கைவிடுத்து உள்ளார். அதில் அவர், கோவிலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்றவில்லையென்றால், வருகிற10-ந் தேதி வந்து அதை அகற்றுவேன் என கூறியுள்ளார்.

மேலும் அவர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

எனினும் இதுகுறித்து கோவில் அறக்கட்டளை நிர்வாகி கன்குராஜ் பாகதே கூறுகையில், “ நேற்று சுமார் 9 ஆயிரம் பேர் கோவிலுக்கு வந்தனர். அப்போது உடை விவகாரம் குறித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை குறித்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது ஒருவர் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை “ என்றார்.

Next Story