தஞ்சையில் விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை
தஞ்சையில் விடிய, விடிய மழைவெளுத்து வாங்கியது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், கரும்புகள் சாய்ந்தன.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் தற்போது வடகிழக்குப்பருவமழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு இந்த மழை தொடங்கியது. அதன் பின்னர் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான நிவர் புயல் காரணமாகவும் டெல்டா மாவட்டங்களில் 2 நாட்கள் மழை நீடித்தது. அதன் பின்னரும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக டெல்டா மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது.
2-வது நாளாக மழை
பின்னர் நேற்று 2-வது நாளாகவும் மழை நீடித்தது. காலை முதலே மழை பெய்து வருகிறது. விட்டு, விட்டு சிலநேரங்களில் பலத்த மழையாகவும், சில நேரங்களில் லேசான மழையாவும் பெய்து கொண்டே இருந்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இந்த தொடர் மழை காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மழை எப்போது நிற்கும், எப்போது பெய்யும் என்று தெரியாத வகையில் விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. சில நேரங்களில் காற்றும் வீசியதால் கடும் குளிர் நிலவியது.
வீடுகளுக்குள் மழைநீர்
தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் முகப்பு விளக்கை எறியவிட்டபடி பஸ், லாரிகள், கார் போன்ற வாகனங்கள் சென்று வந்தன. தஞ்சை மாநகரில் மழை காரணமாக வியாபாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் தரைக்கடை வியாபாரிகள் கடைகளை மூட்டை கட்டி வைத்து இருந்தனர். ஒரு சில இடங்களில் வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்தும் யாரும் வாங்க வரவில்லை.
தஞ்சை வண்டிக்காரத்தெரு பகுதியில் மழை நீர் தேங்கியதால் பல வீடுகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதே போல் வடக்கு வீதி, மேலவீதி உள்ளிட்ட பகுதியில் சாக்கடை நீருடன், மழைநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
கரும்புகள் சாய்ந்தன
தஞ்சையை அடுத்த காட்டூர், வரவுக்கோட்டை, துறையுண்டார்கோட்டை, மடிகை, ஒரத்தநாடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இளம் நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கி காணப்படுகின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இது தவிர தஞ்சையை அடுத்த காட்டூர், வரவுக்கோட்டை, சூரக்கோட்டை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொங்கல் கரும்பும் சாய்ந்துள்ளன. இந்த கரும்பு வயல்களில் தண்ணீரும் அதிக அளவு தேங்கி கிடக்கிறது. இந்த நெற்பயிர்களும் சாய்ந்து காணப்படுகின்றன. சாய்ந்த நெற்பயிர்கள் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்படுவதால் ஓரிரு நாட்களுக்குள் வடியாவிட்டால் அந்த நெல்லும் முளைத்து விடும். இதே போல் நெற்கதிர் வந்த நிலையில் உள்ள நெற்பயிர்கள் சாய்ந்து உள்ளதால் அது கருக்காயாக மாறி விடுமோ? என்று விவசாயிகள் அச்சத்துடன் உள்ளனர்.
மழை அளவு
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
மஞ்சளாறு 98, பட்டுக்கோட்டை 86, திருவிடைமருதூர் 86, அதிராம்பட்டினம் 77, அணைக்கரை 71, அய்யம்பேட்டை 67, மதுக்கூர் 67, பாபநாசம் 66, நெய்வாசல் தென்பாதி 64, கும்பகோணம் 61, ஒரத்தநாடு 59, பேராவூரணி 56, தஞ்சை 55, வல்லம் 55, வெட்டிக்காடு 54, பூதலூர் 42, திருவையாறு 38, குருங்குளம் 37, திருக்காட்டுப்பள்ளி 30, ஈச்சன்விடுதி 30, கல்லணை 29.

Related Tags :
Next Story