பொள்ளாச்சி அருகே பரபரப்பு: 80 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் - கூலி தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு
பொள்ளாச்சி அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவர் தோட்டத்தில் தென்னை மட்டையில் இருந்து சீமார் தயாரிக்க ஓலைகளை கிழித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான வெள்ளிங்கிரி (வயது 32) என்பவர் வந்தார். திடீரென்று வேலை செய்து கொண்டிருந்த மூதாட்டியின் வாயில் துணியை திணித்தார். பின்னர் மூதாட்டியை அவர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பிறகு வெள்ளிங்கிரி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதையடுத்து வாயில் திணிக்கப்பட்டு இருந்த துணியை எடுத்து விட்டு மூதாட்டி சத்தம் போட்டார்.
இதை கேட்ட அக்கம், பக்கத்தினர் தோட்டத்திற்கு ஓடி வந்தனர். பின்னர் நடந்த சம்பவத்தை மூதாட்டி அவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து மூதாட்டியை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வெள்ளிங்கிரியை வலைவீசி தேடி வருகின்றனர். 32 வயதான கூலி தொழிலாளி 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பொள்ளாச்சி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த மாதம் பொள்ளாச்சியில் 90 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக 20 வயது வாலிபரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story