வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Dec 2020 3:15 AM IST (Updated: 4 Dec 2020 11:12 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று கோவில்பட்டியில் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி, 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் சரோஜா, ஒன்றிய செயலாளர் பாபு, மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, கிருஷ்ணவேணி, விவசாய சங்க மாவட்ட தலைவர் மணி, மாவட்ட செயலாளர் ராமசுப்பு, மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சக்கரையப்பன், கட்டுமான தொழிலாளர் சங்க நகர செயலாளர் அந்தோணி செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவன் உத்தரவின்பேரில், மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜெஸ்டின் சாமுவேல்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு அனுமதியின்றி மறியல் போராட்டம் நடத்தியதாக 12 பெண்கள் உள்பட 60 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

Next Story