சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் இதய அடைப்பு நீக்க சிகிச்சை
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் இதய அடைப்பு நீக்க சிகிச்சையான ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
சிவசேனாவின் கருத்துகளை அதிரடியாக கூறிவருபவர் அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.. அந்த கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத்திற்கு கடந்த ஆண்டு நவம்பர் 11-ந் தேதி இதய அடைப்பு நீக்க (ஆஞ்சியோபிளாஸ்டி) சிகிச்சை செய்யப்பட்டது.
அவருக்கு நேற்று முன்தினம் மீண்டும் இதய அடைப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தகவலை வெளியிட்ட அவரது தம்பி சுனில் ராவத் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
அவருக்கு (சஞ்சய் ராவத்) இதய அடைப்பு நீக்க சிகிச்சையாக ஏற்கனவே 3 ஸ்டெண்டுகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் அவர் லீலாவதி தனியார் ஆஸ்பத்திரியில் மீ்ண்டும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராபி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இதய ரத்த குழாயில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டது தெரிவந்தது. இதனால் சீரான ரத்த ஓட்டத்திற்காக அவருக்கு மேலும் 2 ஸ்டெண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. அவர் நலமாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story