மேல்-சபை தேர்தலில் தோல்வி ஆளும் கூட்டணி பலத்தை கணிக்க தவறிவிட்டோம் - தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல்
மகாவிகாஸ் கூட்டணி பலத்தை கணிக்க தவறிவிட்டோம் என மேல்-சபை தேர்தலில் அடைந்த தோல்வி குறித்து மாநில சட்டசபை எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புக்கொண்டு உள்ளார்.
மும்பை,
மராட்டிய மேல்-சபையின் பட்டதாரிகள், ஆசிரியர்கள் தொகுதிகளின் 5 இடங்களுக்கான தேர்தலில் ஆளும் கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேச்சை ஒரு இடத்தில் வெற்றி கண்டது.
இந்தநிலையில் மேல்-சபை தேர்தல் தோல்வி குறித்து பா.ஜனதாவை சேர்ந்த மாநில சட்டசபை எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவின் கூட்டு பலத்தை கணிக்க தவறிவிட்டோம்.
தற்போது அவர்கள் எவ்வளவு பெரிய போட்டியை தருவார்கள் என்பதை தெரிந்து கொண்டோம். அடுத்த தேர்தலுக்கு நாங்கள் நன்றாக தயார் ஆவோம். உள்ளாட்சி அமைப்பு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளோம். தேர்தல் முடிவை ஆய்வு செய்வோம். அடுத்த போட்டிக்கு திட்டமிட உள்ளோம். வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story