கும்மனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; செல்லக்குமார் எம்.பி., பொதுமக்களிடம் உறுதி
கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூர் கிராமத்தில், செல்லக்குமார் எம்.பி. நேரில் சென்று பொதுமக்களிடையே குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றார்.
அப்போது, கும்மனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் தென்பெண்ணை ஆற்றை ஓட்டி அமைந்துள்ளது. இதில், கும்மனூரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தென்பெண்ணை ஆற்றை கடந்து சென்று வயலில் ஏர் ஓட்டுவது, நாற்று நடுவது, உரம் இடுவது, அறுவடை செய்வது போன்ற பல்வேறு விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் நெல்லை அறுவடை செய்து தென்பெண்ணை ஆற்றில் இறங்கி கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களிலும், ஆற்றில் அதிகம் தண்ணீர் செல்லும் போதும் 14 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு வர வேண்டும். எனவே, இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து எம்.பி. கூறுகையில், கும்மானூர் மக்களின் கோரிக்கை குறித்து முதல்-அமைச்சர், தலைமை செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியின் போது ஊராட்சி மன்ற தலைவர்கள் கிருஷ்ணவேணி கிருஷ்ணன், செல்வராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆறுமுக சுப்பிரமணி, சேகர், லலித்ஆண்டனி, செல்வராஜ், மற்றும் கோவிந்தன், கமலக்கண்ணன், ஹரிஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story