ஊட்டியில் பாரம்பரியமிக்க அசெம்பிளி தியேட்டர் திறப்பு
ஊட்டியில் பாரம்பரியமிக்க அசெம்பிளி தியேட்டர் திறக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கலெக்டர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அசெம்பிளி தியேட்டர் உள்பட 2 தியேட்டர்கள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு இருந்தன. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தியேட்டர்களை திறக்கலாம் என்று அரசு அறிவித்தது. எனினும் புதிய திரைப்படங்களை திரையிடுவதிலும், தியேட்டர்களுக்கு மக்கள் வருவதிலும் சிக்கல் இருந்தது. இதனால் ஊட்டியில் தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள அசெம்பிளி தியேட்டர் திறக்கப்பட்டது. அங்கு இருக்கைகளில் பார்வையாளர்கள் சமூக இடைவெளி விட்டு அமர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரியமான அந்த அசெம்பிளி தியேட்டரில் சீரமைக்கப்பட்ட சுற்றுச்சுவரை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு சீரமைக்கப்பட்ட சுற்றுச்சுவரை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த ஆரம்ப காலத்தில் சினிமா எடுக்க பயன்படுத்தப்பட்ட கருவிகள், ரீல்களை பார்வையிட்டார்.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ஊட்டியில் அசெம்பிளி தியேட்டர் இன்று(அதாவது நேற்று) முதல் திறக்கப்பட்டு திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. கொரோனா காலத்தில் அதன் சுற்றுச்சுவர் சீரமைக்கப்பட்டு ஆங்கில திரைப்படங்களின் புகைப்படங்கள் மின்னணு போர்டில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறை தொடங்கப்பட்டு இருக்கிறது என்றார். இந்த திரையரங்கில் தினமும் 2 காட்சிகள் திரையிடப்படுகிறது.
இதில் அசெம்பிளி திரையரங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உபதலை ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி கான்கிரீட் சாலை, ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.44.28 லட்சம் செலவில் மேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தூதூர்மட்டம் முதல் கெரடாலீஸ் வரை சாலை பணி, ரூ.2 லட்சம் மதிப்பில் பழுது பார்க்கப்பட்ட கெரடாலீஸ் அங்கன்வாடி மையம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.47.50 லட்சம் செலவில் மஞ்சகொம்பை முதல் ஆலட்டனை முடிக்கப்பட்ட சாலை ஆகிவற்றை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம் பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட தேனாடு கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.5.65 லட்சம் மதிப்பில் கட்டப்படும் நீர் தேக்க தொட்டியை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story