மாவட்ட செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Young woman commits suicide by hanging near Jolarpet

ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி அரசு வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர், குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். திருமூர்த்திக்கும், அதேபகுதியைச் சேர்ந்த மோனிகா (வயது 23) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

திருமூர்த்தி ஆண்டுக்கு இரு முறை வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து, ஒரு மாதம் தங்கி மீண்டும் வெளிநாடு சென்று விடுவார். மோனிகா அடிக்கடி தொலைப்பேசியில் வீடியோகால் மூலம் திருமூர்த்தியோடு பேசி கொள்வார். நேற்று காலை வீட்டின் அறையில் இளம்பெண் மோனிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து சென்று, மோனிகாவின் பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோனிகா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்போரூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்போரூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. காஞ்சீபுரம் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - கணவர், மாமனார், மாமியார் கைது
காஞ்சீபுரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
3. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் மர்மம் இருப்பதாக தாய் போலீசில் புகார்
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் அளித்தார்.
4. திருப்பூரில், இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - பிரிந்து சென்றவர் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தபோது விபரீத முடிவு
திருப்பூரில் கணவரை விட்டு பிரிந்து சென்ற இளம்பெண் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
5. அஞ்சுகிராமம் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
அஞ்சுகிராமம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-