மதுராந்தகம் ஏரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிக பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியில் 110 தானியங்கி கதவுகள் உள்ளன. 23.3 அடி கொள்ளளவை கொண்ட இந்த ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியதையடுத்து நேற்று முன்தினம் ஏரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நீர்வரத்து அதிகமானதையடுத்து நேற்று 2 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரி நிரம்பி உள்ளதையடுத்து மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைவார்கள்.
மேலும் ஏரியின் உபரிநீர் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக வெளியேற்றப்படுவதால் கரையோரத்தில் வசிக்கும் 30 கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரிக்கரையில் பொதுமக்கள் செல்லாதவாறு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மதுராந்தகம், செய்யூர் உட்கோட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 262 ஏரிகளில் 210 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மேலும் 52 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளதாக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நீர்முடியோன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story