பாலத்தில் நின்று கொண்டு ‘செல்பி’ எடுத்த வாலிபர் ஏரியில் தவறி விழுந்து பலி
நாக்பூரில் பாலத்தில் நின்றுகொண்டு செல்பி எடுத்த வாலிபர் ஏரியில் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மும்பை,
நாக்பூர் உம்ரெட் பகுயில் உள்ள சிவாப்பூரில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரிக்கு சம்பவத்தன்று மதியம் சந்திராப்பூரை சேர்ந்த பிரவீன் மேஸ்ராம் (வயது24) என்ற வாலிபர் நண்பர்களுடன் சென்றார். இதில் அவர்கள் ஏரியின் பாலத்தில் நின்று செல்பி எடுத்து உள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பிரவீன் மேஸ்ராம் நிலைதடுமாறி பாலத்தில் இருந்து ஏரியில் விழுந்தாா். நண்பர்கள் வாலிபரை மீட்க முயன்றனர். எனினும் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் உதவியுடன் வாலிபரை தேடினர். இதில் மறுநாள் வாலிபர் ஏரியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து உம்ரெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story