ரூ.43 கோடி செலவில் அம்பர்நாத் சிவன் கோவில் புதுப்பிக்கப்படுகிறது
அம்பர்நாத்தில் உள்ள சிவன் கோவில் ரூ.43 கோடி செலவில் புதுக்கப்பட உள்ளதாக ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. கூறியுள்ளார்.
மும்பை,
தானே மாவட்டம் அம்பர்நாத்தில் வால்துனி நதிக்கரையோரம் பழமையான சிவன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் பாறைகளால் செதுக்கப்பட்ட 1, 000 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். ஆண்டுதோறும் சிவராத்திரி அன்று இங்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். இந்தநிலையில் இந்த கோவில் ரூ.43 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளதாக ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி. கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில்:-
அம்பாநாத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை மேம்படுத்த ரூ.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியதற்காக தானே மாவட்ட பொறுப்பு மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அம்பா்நாத் சிவன் கோவிலை புதுப்பிக்கும் பணி 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட பணிகளின் போது கோவில் நுழைவு வாயில், அருகில் உள்ள பஸ் நிலையம், பூ மார்க்கெட், ஜந்தர் மந்தர் பூங்கா, வாகன பார்க்கிங் வசதி, வால்துனி நதி பாதுகாப்பு திட்டம், பழமையான குளத்தை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
2-ம் கட்டமாக வால்துனி நதிக்கரையை அழகுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதில் முதல் கட்ட பணிக்கு ரூ.20 கோடியும், மீதி உள்ள தொகை 2-ம் கட்ட பணிகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
Related Tags :
Next Story