சாலையோர பள்ளங்களால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்


சாலையோர பள்ளங்களால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
x
தினத்தந்தி 6 Dec 2020 6:16 AM IST (Updated: 6 Dec 2020 6:16 AM IST)
t-max-icont-min-icon

சாலையோர பள்ளங்களால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. எனவே அந்த பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையோராத்தில் பல இடங்களில் பெரிய பள்ளங்கள் உள்ளன. தற்போது, மழை பெய்து வருவதால் அந்த பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

இந்நிலையில் சேலத்தில் இருந்து கரூர் நோக்கி செல்லும் பஸ்கள், லாரிகள், கார்கள் போன்றவை ஒன்றையொன்று முந்திக் கொண்டு அதிவேகமாக செல்வது வழக்கம். அப்போது சாலையோரத்தில் வரும் வாகனங்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தண்ணீர் நிரம்பியுள்ள பள்ளத்தில் வாகனத்தை விட்டு விபத்து ஏற்பட்டு வருகிறது.

அதே போல் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும்போது சாலை ஓரமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல், அதில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

கோரிக்கை

இது குறித்து பல முறை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே இனிமேலாவது தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தார் சாலையை ஒட்டியுள்ள பள்ளங்களை சீரமைத்து தண்ணீர் தேங்காதவாறு செய்து தொடர் விபத்தை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story