கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு


கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2020 6:20 AM IST (Updated: 6 Dec 2020 6:20 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

கரூர்,

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலிதா நினைவு நாளையொட்டி கரூர் அரிஸ்டோ கார்னரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன் தலைமை தாங்கி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் எம்.எஸ்.கண்ணதாசன், நகர செயலாளர்கள் நெடுஞ்செழியன், வி.சி.கே.ஜெயராஜ், பாண்டியன், புஞ்சை புகளூர் பேரூர் கழக செயலாளர் விவேகானந்தன் உள்பட ஏராளமான அ.தி.மு.க. வினர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி...

இதேபோல் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு செயற்குழு உறுப்பினரும், நெரூர் வடபாகம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவருமான ஆர். மணிவண்ணன் தலைமை தாங்கி மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார். இதில் அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி

இதேபோன்று கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அதன்படி கரூர்-கோவை சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார் தலைமை தாங்கி மலர் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து ஜெயலலிதாவின் உருவப்படம் பதித்த சீருடை அணிந்திருந்த எம்.ஜி.ஆர். இளைஞர் அணியினர் ஏராளமானோர் 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்- அமைச்சராக்க பாடுபடுவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story