திருவாரூர் மாவட்டத்தை தத்தளிக்க வைத்த புயல்: குடியிருப்புகளையும், வயல்களையும் குளங்களாக மாற்றிய கனமழை


திருவாரூர் மாவட்டத்தை தத்தளிக்க வைத்த புயல்: குடியிருப்புகளையும், வயல்களையும் குளங்களாக மாற்றிய கனமழை
x
தினத்தந்தி 6 Dec 2020 7:57 AM IST (Updated: 6 Dec 2020 7:57 AM IST)
t-max-icont-min-icon

புரெவி புயல் காரணமாக பெய்த மழை திருவாரூர் மாவட்டத்தை தத்தளிக்க வைத்துள்ளது. இடை விடாத மழை காரணமாக குடியிருப்புகள், வயல்கள் குளங்கள்போல் காட்சி தருகின்றன. தாழ்வான இடங்களில் வசித்து வந்தவர்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கொரடாச்சேரி,

புரெவி புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட் களாக திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கனமழை பெய் தது. தாமதமாக பயிரிடப்பட்ட சம்பா வயல்களில் இளம் பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. சில இடங்களில் கதிர்வந்த பயிர்கள் அடியோடு சாய்ந்து அழுக ஆரம்பித் துள்ளன. திருவாரூர் மாவட்ட பகுதிகள் கனமழையால் தத்தளித்து வருகின்றன.

முத்துப்பேட்டை அருகே விளாங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்த சம்பா வயல்கள் கனமழையால் குளம்போல் காட்சி அளிக் கிறது. இந்த பகுதியில் கரையங் காடு பகுதியில் இருந்து தர்க்காசு வரையிலான பகுதி யில் உள்ள வயல்களில் நெற்பயிரை மூழ்கடித்தபடி மழைநீர் ததும்புகிறது. இந்த வயல்களை நேற்று ஒன்றிய கவுன்சிலர் ஜெயராமன் பார்வையிட்டு விவசாயி களுக்கு ஆறுதல் கூறினார். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கற்பகநாதர் குளம் ரெங்கராஜன் கூறுகை யில், ‘கடன் வாங்கி சாகுபடி செய்த சம்பா பயிர்கள் நல்ல வளர்ச்சி அடைந்து வந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். மழை எங்களுடைய மகிழ்ச் சியை மூழ்கடித்து விட்டது. அரசு உரிய இழப்பீடு தரும் என்ற நம்பிக்கை மட்டுமே இப்போது உள்ளது’ என் றார்.

கொரடாச்சேரி

கொரடாச்சேரி ஒன்றியத் தில் 2,000 ஏக்கருக்கு மேலான விளை நிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. ஒன்றியத்தில் பாயும் வெட்டாறு, பாண் டவையாறு, ஓடம்போக்கி, வாழவாய்க்கால் ஆறு உள் ளிட்ட ஆறுகளிலும், வாய்க் கால்களிலும் கரைகளை தொட்டு தண்ணீர் செல்கிறது. ஆறுகளில் தண்ணீர் செல்வ தால் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகிறார்கள்.

எண்கண், பெருங்குடி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் பல வீடுகளின் சுவர் கனமழையால் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள் ளது. ஒன்றியத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நிவாரண முகாம்களில் தாழ்வான பகுதிகளை சேர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்துள் ளனர். அவர்களுக்கு அரசின் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. முகந்தனூர், பெரும்புகழூர், பெருந்தரக்குடி உள்ளிட்ட இடங்களில் தேங்கிய மழை நீரை வடிய வைக்கும் பணிகளை கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் பார்வையிட்டார். அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பாஸ்கர், மணிமாறன் ஆகி யோர் உடன் இருந்தனர்.

மன்னார்குடி

மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டை, மேல நாகை, மேலவாசல், காரிக் கோட்டை உள்ளிட்ட கிராமங் களில் பல நூறு ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தைப்பொங்கலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் சாகுபடி செய்த கரும்புகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.

புயல் எதிரொலியாக கடந்த 4 நாட்களாக மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதி களில் தொடர் மழை பெய்த தால் கரும்புகள் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாய்ந்த கரும்புகளை விவசாயி கள் ஒன்று சேர்த்து கட்டி வைத்து பாதுகாக்க முயற்சிக் கின்றனர். 300 ஏக்கர் அளவிற்கு பயிரிடப்பட்ட கரும்புகள் அறுவடைக்கு தயாராகும் நிலையில் மழையினால் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

திருமக்கோட்டை

கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையினால் மன்னார் குடி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மன்னார் குடி அடுத்த மகாதேவபட்டி னத்தில் ஆறுமுகம் என்பவரு டைய வீடு பலத்த மழையினால் இடிந்து விழுந்தது.

திருமக்கோட்டையை சேர்ந்த மகாராஜபுரம் கிராமத்தை சேர்ந்த ஞானம் என்பவருடைய வீட்டு சுவரும் கனமழையால் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த சைக்கிள் சேதம் அடைந்தது. இதை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் அங்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

வலங்கைமான்

கனமழையால் வலங்கை மான் வட்டார பகுதிகளில் வெட்டாறு, சுள்ளான் ஆறு, வெண்ணாறு, குடமுருட்டி உள்ளிட்ட ஆறுகளில் வெள் ளம் கரை புரண்டு ஓடுகிறது. வலங்கைமான் பகுதியில் வயல்கள் உள்ளிட்ட விளை நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் கன மழை குளம்போல் மாற்றி உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரி விக்கின்றனர்.

வலங்கைமான் வட்டாரத் தில் 182 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. அண்ணு குடி, மணலூர் ஆகிய கிராமங் களில் 2 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளன. சித்தன்வாழூர், மாணிக்கமங் கலம் உள்ளிட்ட கிராமங்களில் வயல்களை மழைநீர் சூழ்ந் துள்ளது. தாழ்வான பகுதி களை சேர்ந்த மக்களை தங்க வைப்பதற்காக பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,987 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந் துள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பணி களை ஒன்றியக்குழு தலைவர் சங்கர், ஒன்றிய ஆணையர்கள் கமலராஜன், சிவக்குமார், தாசில்தார் பரஞ்சோதி உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகிறார்கள்.

தொடர் மழையால் கூத்தா நல்லூர் பகுதியில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர் அருகே உள்ள பெரியகொத்தூர் கிராமம் நடுத்தெருவில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த பகுதியில் சம்பா வயல்கள் வெள்ளக்காடு போல காட்சி தருகின்றன.

Next Story