மயான பாதை விவகாரம்: இளையான்குடி அருகே பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்
இளையான்குடி அருகே மயான பாதைக்கு செல்ல மற்றொரு தரப்பினர் தடுத்ததால் பெண் பிணத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெண் பிணத்துடன்...
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள மேலாயூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி நாகலட்சுமி (வயது 30). இவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் சொந்த கிராமத்துக்கு எடுத்து வந்தனர். அப்போது மயான பாதைக்கு வழக்கமாக செல்லும் பாதையை தவிர்த்து வேறு பாதையில் செல்ல முயன்றனர்.
அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர் பிணத்தை அந்த வழியாக அடக்கம் செய்ய எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து பிணத்துடன் வந்தவர்கள் சாலையில் இறந்தவரின் உடலை வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். மற்றொரு தரப்பினரும் ஊரில் ஒரு பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாசில்தார் ரமேஷ், போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story