கள்ளக்குறிச்சி, மயிலம், திண்டிவனம் தொகுதியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
கள்ளக்குறிச்சி, மயிலம், திண்டிவனம் தொகுதியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி,
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தியாகதுருகம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ஷியாம் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு கலந்துகொண்டு ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜவேலு, ஜெயச்சந்திரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சாமிதுரை, ராஜேந்திரன், குமாரசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சிறுவல் மணிவண்ணன், எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி துணைச் செயலாளர் ரமேஷ், விவசாய அணி துணை செயலாளர் பாலசுப்ரமணியன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் குமார், பாலகிருஷ்ணன், இதய கண்ணன், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் சதாசிவம், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சிவா, நகர இணை செயலாளர் கங்காஜெயப்பிரகாஷ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் தியாகை, நாகலூர், வேங்கைவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஜெயலலிதா படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினர். மேலும் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாடூர் சுங்கச்சாவடி அருகில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கும், ஜெயலலிதா படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். இதில் பிரபு எம்.எல்.ஏ., வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு, நகர செயலாளர் பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தீவனூர்
மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தீவனுரில் உள்ள மயிலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளரும், நடுவனந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான புலியனூர் விஜயன் தலைமை தாங்கி, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
மானூர்
திண்டிவனம் அடுத்த மானூர் கிராமத்தில் மரக்காணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய செயலாளரும், கீழ்எடையாளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான கீழ்எடையாளம் நடராஜன் தலைமை தாங்கி, ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஒன்றிய தலைவர் குமார், மாவட்ட பிரதிநிதி சரசுமாணிக்கம், மாணவரணி ஒன்றிய செயலாளர் கீழ்அருங்குணம் குமரவேல், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய விவசாய அணி செயலாளர் ஆதிபகவான், மாவட்ட பிரதிநிதி கீழ்சித்தாமூர் முருகன், ஒன்றிய இணை செயலாளர் கோமதியுவராஜா, ஒன்றிய பாசறை செயலாளர் ராஜா, ஒன்றிய ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் நரேந்திரபிரபு, ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் உஸ்மான்அலி, மானூர் கிளை செயலாளர்கள் ராஜேஷ், சங்கர், கிளை செயலாளர் குப்பன், ஒன்றிய இளைஞரணி அவை தலைவர் முனியாண்டி, கிளை செயலாளர்கள் குணசேகரன், சிங்கனூர் முருகன், தகவல் தொழில் நுட்ப பிரிவு ஊராட்சி செயலாளர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒலக்கூர் ஒன்றியம்
திண்டிவனம் ஒலக்கூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஒலக்கூர் கூட்டுரோடு பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பொன்மலர் தயாளன் தலைமை தாங்கி, ஜெயலலிதாபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் இளைஞரணி ஒன்றிய செயலாளர் நீலமேகம், மகளிரணி ஒன்றிய செயலாளர் கீதாஞ்சலி, அண்டப்பட்டு ஜெயமுருகன், ஒன்றிய பொருளாளர் ஜெகஜோதி, அமாவாசையான், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரகாஷ், கீழ் பூதேரி துரை, பிரகாஷ், ஆவணிப்பூர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story