வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க. சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க. சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2020 2:30 PM IST (Updated: 6 Dec 2020 2:18 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவண்ணாமலை,

மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற கோரியும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் நேற்று திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு தலைமை தாங்கினார்.

வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், தணிக்கைக்குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான கு.பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் துணை பொதுச் செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ. பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்துக் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், அமைப்பு சாரா தொ.மு.க. மாவட்ட தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் பொன்.முத்து, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story