இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஈரோடு,
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் மாதம் 6-ந் தேதி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதையொட்டி நேற்று காலையில் இருந்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஈரோடு மாவட்ட மற்றும் மாநில சோதனை சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள போலீசார் ஈரோட்டுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர்.
இதேபோல் ஈரோடு ரெயில் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு காவிரி ரெயில்வே மேம்பாலத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story