பழம்பெரும் நடிகர் ரவி பட்வர்தன் மரணம்
பழம்பெரும் நடிகர் ரவி பட்வர்தன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மும்பை,
பழம்பெரும் நடிகர் ரவி பட்வர்தன். இவர் குடும்பத்தினருடன் தானேயில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் அவருக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை ஜூபிடர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இந்தநிலையில் மாரடைப்பு காரணமாக ரவி பட்வர்தன் உயிரிழந்தார். அவருக்கு வயது 84.
இது குறித்து நடிகர் ரவி பட்வர்தனின் மகன் நிரஞ்சன் கூறுகையில், “எனது தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மேலும் அவருக்கு மூச்சு திணறல் பிரச்சினையும் ஏற்பட்டது. எனவே அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். ஆனால் ½ மணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. நாங்கள் அவரை இழந்துவிட்டோம்” என்றார்.
பழம்பெரும் நடிகரான ரவி பட்வர்தன் 200-க்கும் மேற்பட்ட மராத்தி, இந்தி படங்களில் நடித்து உள்ளார். மேடை நாடகங்களிலும் நடித்து இருக்கிறாா்.
நடிகர் பட்வர்தனுக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். ரவி பட்வர்தனின் மறைவுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story