நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாகர்கோவில்,
சட்ட மேதை அம்பேத்கர் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. அதே போல குமரி மாவட்டத்திலும் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவர் சிலைக்கும், உருவப்படத்துக்கும் பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
நாகர்கோவில் வடசேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பொதுமக்களும் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் சந்துரு, நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், சேவியர் மனோகரன், ஜெயசீலன், சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆஸ்டின் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். மாநகர செயலாளர் மகேஷ், நிர்வாகிகள் மதியழகன், தில்லைசெல்வம், சிவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ்
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.
குமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பகலவன், மாநகர செயலாளர் கணேஷ், மேசியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமை தாங்கி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், நிர்வாகிகள் முருகேசன், அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அ.ம.மு.க. சார்பில் மருத்துவர் அணி செயலாளர் ரவி தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையிலும், தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் தினகரன் தலைமையிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜேஷ்வரபாண்டியன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆரல்வாய்மொழி
ஆரல்வாய்மொழி டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் அம்பேத்கரின் நினைவு தின நிகழ்ச்சி அழகிய நகர் பகுதியில் நடந்தது. அங்கு அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மன்றத் தலைவர் போஸ் தலைமையில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் செயலாளர் ரமேஷ், பொருளாளர் வேலு, அழகியநகர் ஊர் தலைவர் நெல்சன், நிர்வாகக்குழு தலைவர் நீலன், இரட்சன்யசேனை பொறுப்பாளர் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏழை- எளியவருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.
சுசீந்திரம்
தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சுசீந்திரம் கற்காடு பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு சுசீந்திரம் பேரூர் செயலாளர் மாடசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட துணைசெயலாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story