மகன் இறந்த சோகத்தில் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை


மகன் இறந்த சோகத்தில் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை
x
தினத்தந்தி 7 Dec 2020 9:49 AM IST (Updated: 7 Dec 2020 9:49 AM IST)
t-max-icont-min-icon

மகன் இறந்த சோகத்தில் அரசு பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை,

கோவையை அடுத்த இருகூரை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவருடைய மனைவி சீதாம்மாள் (வயது 59). இவர் ஆலாந்துறையில் உள்ள அரசு பள்ளியில் தையல் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு நவீன் (31), நினேஷ் (29) ஆகிய மகன்கள் இருந்தனர். சீதாம்மாளின் கணவர் பாலசுந்தரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று மாயமானார். அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் சீதாம்மாள் மனவேதனையில் இருந்து வந்தார்.

விஷம் குடித்தார்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நினேஷ் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இது சீதாம்மாளுக்கு மேலும் வேதனையை ஏற்படுத்தியது. இதனால் அவர் யாரிடமும் பேசாமல் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தார்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சீதாம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story