பாதிப்பு திடீர் குறைவு மராட்டியத்தில் புதிதாக 3,075 பேருக்கு கொரோனா மும்பையில் 544 பேருக்கு தொற்று


பாதிப்பு திடீர் குறைவு மராட்டியத்தில் புதிதாக 3,075 பேருக்கு கொரோனா மும்பையில் 544 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 8 Dec 2020 6:29 AM IST (Updated: 8 Dec 2020 6:29 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 75 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் மும்பையில் 544 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று பாதிப்பு அதிரடியாக சரிந்து உள்ளது. மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 75 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 55 ஆயிரத்து 341 ஆக உயா்ந்து உள்ளது.

இதேபோல மாநிலத்தில் நோய் பாதிப்பில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 7 ஆயிரத்து 345 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். இதுவரை 17 லட்சத்து 30 ஆயிரத்து 715 பேர் குணமடைந்து உள்ளனர். மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்து 767 பேர் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் மேலும் 40 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். மராட்டியத்தில் 47 ஆயிரத்து 774 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

மாநிலத்தில் நோய் பாதித்தவர்களில் 93.28 சதவீதம் பேர் குணமாகி இருக்கிறார்கள். 2.57 சதவீதம் பேர் பலியாகி உள்ளனர். மராட்டியத்தில் இதுவரை 1 கோடியே 13 லட்சத்து 18 ஆயிரத்து 721 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மராட்டிய தலைநகர் மும்பையிலும் கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்து உள்ளது. நேற்று நகாில் புதிதாக 544 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நகரில் இதுவரை 2 லட்சத்து 86 ஆயிரத்து 590 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 789 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது நகரில் 12 ஆயிரத்து 65 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மேலும் 11 பேர் பலியானதால் ஆட்கொல்லிநோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 913 ஆகி உள்ளது. நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 280 நாட்களாக உள்ளது. தொற்று பாதித்தவர்களில் 92 சதவீதம் போ் குணமாகி உள்ளனர். தாராவியில் நேற்று புதிதாக 7 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அங்கு 15 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story