சொத்துவரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை - புதுச்சேரி நகராட்சி அதிரடி
சொத்து வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதுவை நகராட்சி எச்சரித்துள்ளது. புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
புதுச்சேரி நகராட்சியில் சொத்துவரி செலுத்தாதவர்கள் மற்றும் வணிக உரிமம் புதுப்பிக்காதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரி நகராட்சியின் இணையதளமான www.pdy-mun.in வெளியிடப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பார்வையிடலாம்.
மேலும் சொத்துவரி செலுத்துவது என்பது சட்டரீதியான கடமை. அதை உரிய நேரத்தில் செலுத்தாவிடில் அபராதம், வட்டி ஆகியவை விதிக்கப்படுவதோடு அசையும் மற்றும் அசையா சொத்துகளை ஜப்தி செய்யும் நடவடிக்கையும் எடுக்க நேரிடும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் வணிக நிறுவனங்கள் நடத்துவோர் அனைவரும் புதுச்சேரி நகராட்சியிடம் வணிக உரிமம் பெறுவதோடு அதை உரிய கால இடைவெளியில் புதுப்பித்து வருதல் வேண்டும். தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படுவதோடு அந்த நிறுவனங்களை சீல் வைக்கவும் நேரிடும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் புதுச்சேரி நகராட்சியால் உரிய ஒத்துழைப்பு கோரப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story