விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல்: உளுந்தூர்பேட்டையில் அரசு பஸ் டயர் கிழிப்பு தி.மு.க.வினர் 149 பேர் கைது
உளுந்தூர்பேட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல் போராட்டம் நடத்திய போது அரசு பஸ் டயரை கிழித்த தி.மு.க.வினர் 149 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி நேற்று நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களில் வியாபாரிகள் தங்களது கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமையில் அக்கட்சியினர் உளுந்தூர்பேட்டையில் ஒன்று திரண்டனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை வழிமறித்து அதன் டயரை இரும்பு கம்பியால் கிழித்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டனர்.
கைது
அப்போது அங்கிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார், ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் உள்பட 149 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தவிர உளுந்தூர்பேட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் தனித்தனியாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story