கொடைக்கானலில் 6-வது நாளாக கனமழை: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கிராம மக்கள் கயிறு கட்டி மீட்பு


கொடைக்கானலில் 6-வது நாளாக கனமழை: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கிராம மக்கள் கயிறு கட்டி மீட்பு
x
தினத்தந்தி 9 Dec 2020 2:25 PM IST (Updated: 9 Dec 2020 2:25 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் 6-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மலைக்கிராம மக்களை பேரிடர் மீட்பு குழுவினர் கயிறு கட்டி மீட்டனர்.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானல் கீழ்மலை கிராமங்கள் செம்ப ரான்குளம், கருவேலம்பட்டி, பட்டியக்காடு உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இதில் செம்பரான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம் காலையில் அந்த பகுதியில் உள்ள தோட் டத்திற்கு கூலி வேலைக்கு சென்றனர். மலைக் கிராமங் களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் செம்பரான் குளம் கிராமம் அருகே காட் டாற்று வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

இந்த நிலையில் தோட் டத்திற்கு வேலைக்கு சென்ற கிராம மக்கள் மாலையில் தண்ணீரை கடந்து வரமுடி யாமல் தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மலைக்கிராம மக்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்ட னர். இதேபோல் கருவேலம் பட்டி கிராமத்தை வெள்ளம் சூழ்ந்து தனித்தீவாக காட்சி அளிக்கிறது.

இதனால் அந்த பகுதி கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வர முடியாமல் தவித்து வருகின்ற னர். செம் பரான்குளம், கருவேலம்பட்டி மலைக் கிராமங்களுக்கு பேரிடர் மீட்பு குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக சென்று உதவி செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Next Story