ராணிப்பேட்டையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் மூடல் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடின


ராணிப்பேட்டையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் மூடல் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடின
x
தினத்தந்தி 9 Dec 2020 7:34 PM IST (Updated: 9 Dec 2020 7:34 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.

சிப்காட் (ராணிப்பேட்டை),

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டதிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று ராணிப்பேட்டையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. எனினும் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. சிப்காட் மற்றும் கிராமப்பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. சிப்காட் பகுதியில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளும் வழக்கம் போல் இயங்கின.

இதேபோல் கலவை தாலுகாவில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. மாலை 4 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

Next Story